தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் ஜாலி தான் – பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் ஜாலி தான் - பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் ஜாலி தான் - பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் ஜாலி தான் – பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!

தமிழக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சிந்தனை மற்றும் செயல்திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புத் திரைப்படங்களை பள்ளிகல்வித்துறை மாதம்தோறும் பள்ளிகளில் ஒளிபரப்பி வரும் நிலையில் அக்டோபர் மாதத்திற்கான திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

திரைப்படங்கள்:

தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை அதிரடியான வகையில் செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் போன்ற பல திட்டங்கள் தற்போது சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. மேலும் மாணவர்களின் சிந்திக்கும் செயல்திறனை ஒருமுகப் படுத்துவதற்காக அரசு, பள்ளிகளில் திரைப்படங்களை ஒளிபரப்பும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இதற்காக மாதம் தோறும் குறிப்பிட்ட பாட வேளைகளை அரசு ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது. அரசு ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்யும் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட வேண்டும். திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவும் முடிந்தபிறகும் படத்தை பற்றிய கருத்தை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேட்டறியவும் கலந்துரையாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நாளை (அக்.12) மின்தடை – மின்சார வாரியத்தின் புதிய அறிக்கை!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிடப்பட வேண்டிய திரைப்படம் குறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி அக்டோபர் 13-ம் தேதி அன்று பிரெஞ்சு மொழியில் வெளியான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள குறும்படமான ” தி ரெட் பலூன் ” திரைப்படத்தினை ஒளிபரப்ப பரிந்துரை செய்துள்ளது. திரைப்படம் முடிந்த பிறகு படம் குறித்த தங்களது கருத்தினை மாணவ-மாணவிகள் பேப்பரில் எழுதி ஆசிரியர்களிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!