வார இறுதி நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்து துறை புதிய உத்தரவு!!!

0
வார இறுதி நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை புதிய உத்தரவு!!!

வார இறுதி நாட்கள் மற்றும் விக்ஷேஷ நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை புதிய உத்தரவு விடுத்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வெளியூருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் விடப்படும்.

தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்களிலும் பொதுமக்களுக்காக சிறப்புப் பேருந்துகள் ஓடும். இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்து பயன்பாடு ஆகியவற்றை கொண்டு கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி நாட்களில் மட்டுமே பேருந்து சேவை விடப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

UPSC ஆணையத்தில் 500+ காலிப்பணியிடங்கள்

இந்த சிறப்புப் பேரூந்துகள் காஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலையை சென்றடையும் வண்ணம் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் மே 23ம் தேதி முதல் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கிளம்பும் பேருந்துகளின் எண்ணிக்கை அப்போதைய சூழலை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!