உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – டிராவில் முடிந்த ஆட்டம்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் இரண்டாவது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 24) மூன்றாம் சுற்று நடைபெற இருக்கிறது.
செஸ் போட்டி
அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மற்றும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் மோதுகின்றனர். நேற்று (ஆக.22)நடைபெற்ற இறுதி போட்டியின் முதல் சுற்றில் 35 ஆவது நகர்த்தலின்போது ஆட்டத்தை டிரா செய்வதாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.
IBPS RRB PO Prelims தேர்வு முடிவுகள் 2023 – இன்று வெளியீடு!
அதன் பின் இறுதி போட்டியின் இரண்டாவது சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் வீரருக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும். மேலும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 91 லட்சமும், ஃபைனலில் தோல்வி அடைபவருக்கு ரூ. 66 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற இறுதி சுற்றின் இரண்டாம் கட்டமும் தற்போது டிராவில் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே இது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.