
அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி…!! மார்ச் மாத ஊதியம் வருவதில் காலதாமதம்…!! ஏன் தெரியுமா…??
நாட்டில் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்வது அரசு ஊழியர்கள் தான். அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1 ஆம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கும் மாதந்தோறும் 1 ஆம் தேதி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படும். ஏனென்றால், அன்றைய தினம் வருடாந்திர வங்கி கணக்கு முடிக்கும் நாள் என்பதால், வங்கிகள் செயல்படாது என்ற காரணத்தினால் தான்.
அந்தவகையில், தற்போது தமிழ்நாடு அரசானது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிக்கும் நாள் என்பதால், தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் 17 லட்சம் அரசு ஊழியர்களுக்கும் அதற்கடுத்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று, மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியமானது அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

























