10 வருடங்களாக ஆதார் அப்டேட் செய்யவில்லையா ?? இந்தப்பதிவு உங்களுக்குத்தான் ..!!!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் மனிதர்களின் முக்கிய ஆதாரமாக இருப்பது ஆதார் அடையாள அட்டை ஆகும் .இது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் மற்றும் பள்ளி கல்லூரிகளில் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஒரு ஆதார் அட்டையை வைத்து சாதாரண மனிதனின் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் ஆதார் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வரும் சூழலில் 10 வருடத்திற்கு ஒருமுறை ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
இனி ஒவ்வொருவருக்கும் 5000 ருபாயா? அரசின் புதிய திட்டம்!!
ஆதார் அட்டையை புதுப்பிக்கும் முறை:
ஆதார் அட்டையை UIDAI (unique identification authority of india )என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு myaadhaar என்ற செயலியில் updatedocument என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.அல்லது இ சேவை மையத்திற்கு சென்று அங்கு உங்களுடைய ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம்.


























