Gold Rate Today: நகை பிரியர்கள் கவனத்திற்கு.. மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??
டிரம்பின் இறக்குமதி வரி விதிப்பால் சர்வதேச பங்குச்சந்தை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று (09-04-2025) ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை அதாவது காலையில் ரூ.520 உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, மதிய வேளையில் மீண்டும் ரூ.960 உயர்ந்தது. அதாவது நேற்று மட்டும் மொத்தமாக ரூ.1,480 விற்பனை செய்யப்பட்டு சாமானிய மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அந்த வகையில்” இன்று (10-04-2025) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,560 க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.107 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது”.
























