
Today Gold Rate: மக்களே..இன்னைக்கு நகை வாங்க போறீங்களா..?? அப்போ ஒரு சவரன் எவ்ளோன்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க
சமீபத்தில் வெளியான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலையானது குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தங்கத்தின் விலையானது சரிய தொடங்கி கடந்த 5 நாட்களாக குறைந்து காணப்பட்டது. அந்தவகையில், இன்று (26.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து 1 சவரன் ரூ. 65,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,11,000 ஆகவும், 1 கிராம் ரூ. 111 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























