நாடு முழுவதும் 10 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து – மத்திய அரசு திடீர் அறிவிப்பு!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் பலர் இலவச ரேஷன் வசதியை போலியான முறையில் பயன்படுத்தி வருவதால் சுமார் 10 லட்சம் கார்டுகள் ரத்து செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.
ரேஷன் கார்டு ரத்து:
நாடு முழுவதும் அரசின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. அந்த வகையில் அரசின் இலவச பொருள்கள் பல ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு சென்றடைகிறது. இதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பலர் பலனடைகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதாவது லட்சக்கணக்கான மக்கள் அரசின் இலவச ரேஷன் வசதியை பயன்படுத்தி வரும் நிலையில், அதில் முறைகேடு நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது
Follow our Instagram for more Latest Updates
அதனால் நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச ரேஷன் வசதியை போலியான முறையில் பயன்படுத்தி வருவதாக அரசு 10 லட்சம் ரேஷன் கார்டுகளை கண்டறிந்துள்ளது. அந்த கார்டுகள் ரத்து செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சுமார் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் வசதியை பெறுகின்றனர். அவர்களில் இலவச கோதுமை, அரிசி மற்றும் உளுந்து ஆகியவை தகுதியற்ற ரேஷன் கார்டுக்கு வழங்கப்படுகின்றன.
உங்களின் e-Aadhaar கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? இதற்கு ஆதார் எண் தேவையில்லை! முழு விபரம் இதோ!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தகுதி இல்லாத ரேஷன் கார்டுகளின் விவரங்கள் டீலருக்கு அனுப்பப்படும் எனவும், இதன் பிறகு இவர்களுக்கு விநியோகஸ்தர்கள் ரேஷன் வழங்க மாட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது. அதன் பின் டீலர்கள் தகுதியற்ற ரேஷன் கார்டுகளின் விவரங்களை மாவட்டத் தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின் அவர்களது கார்டுகளை அரசு ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.