79 ஆண்டுகளுக்கு பின் வெடித்த குண்டு.. அச்சத்தில் மக்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
ஜப்பானில் 2ஆம் உலகப்போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு, 79 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் குண்டு வெடித்ததால், 87 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீவிரமடையும் ஈரான் – இஸ்ரேல் போர்.. நீடிக்கும் பதற்றம்.. சர்வதேச விமான சேவைகள் ரத்து!!
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பள்ளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்புக்கு காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், ஜப்பான் தற்காப்பு படைகள் உலகப்போரின் போது அமெரிக்கா வீசிய 2,348 வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது.



























