பெண்களுக்கு நிதியுதவி, இலவச பேருந்து வசதி.. கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதி – வெளியான அப்டேட்!
தெலுங்கானா அரசு பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு அறிவிப்பு
தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை டிச. 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி வாக்குறுதியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பஸ் பயணம், வீடு கட்ட நிலம், இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறிய BAJAJ FINANCE நிறுவனம் – ரிசர்வ் வங்கி அதிரடி!! வாடிக்கையாளர்கள் பாதிப்பு!!
மேலும் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும். கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலத்துடன், வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவியும் வழங்கப்படும். மாணவர்கள் கல்லூரி கட்டணத்தைக் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன.