விதிமுறைகளை மீறிய BAJAJ FINANCE நிறுவனம் – ரிசர்வ் வங்கி அதிரடி!! வாடிக்கையாளர்கள் பாதிப்பு!!
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் Insta EMI Card மற்றும் eCOM உள்ளிட்ட கடன் வழங்கும் சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
பஜாஜ்:
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக கடனுதவியை வழங்கி வருகிறது. அதாவது, கார், டிவி, மொபைல் உள்ளிட்டவைகளை EMI மூலமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை மீறியதால் தற்போது Insta EMI Card மற்றும் eCOM ஆகிய இரண்டு கடன் திட்டத்தின் வாயிலாக கடன் வழங்குவதை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.
நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
இந்த குறைபாடுகளை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சரிசெய்த பிறகு தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலமாக, ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாவர். மேலும், ஏற்கனவே Insta EMI Card மற்றும் eCOM மூலமாக பொருட்கள் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த விளைவும் ஏற்படாது என பஜாஜ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.