TCS நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் கவனத்திற்கு – ஷாக்கிங் ரிப்போர்ட்!

0
TCS நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் கவனத்திற்கு - ஷாக்கிங் ரிப்போர்ட்!
TCS நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் கவனத்திற்கு - ஷாக்கிங் ரிப்போர்ட்!
TCS நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் கவனத்திற்கு – ஷாக்கிங் ரிப்போர்ட்!

இந்தியாவில் தற்போது கொரோனா 3ம் அலைத்தொற்று வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அலுவலக ஊழியர்கள் WFH முறையை முடித்து அலுவலகத்திற்கு திரும்புவதற்கு பதிலாக வேலையை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WFH முறை

நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மக்கள் தங்களுக்கு வசதியாக தேடிக்கொண்ட ஒரு விஷயம் வீட்டிலிருந்து வேலை செய்வதாகும். இப்போது, அலுவலக ஊழியர்களிடையே வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது அதிக சம்பளம் கொடுப்பது ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வு கொடுக்கப்பட்டால் பல ஊழியர்கள் WFH முறையை நோக்கி செல்வதாகத் தெரிகிறது. அந்த விருப்பத்தை எடுத்துக் கொண்டால், சிலர் வேலையை விட்டுவிடுவது கூட பரவாயில்லை என்று முடிவு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – அனுமதி அளிக்குமா அரசு?

இது குறித்து ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிறுவனமான CIEL HR சர்வீசஸ் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு 10 ஊழியர்களில் குறைந்தது 6 பேராவது அலுவலகத்திற்கு திரும்புவதற்கு பதிலாக ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, அலுவலகத்திற்கு வர வேண்டிய அதிக ஊதியம் பெறும் வேலையை தவிர்க்க தயாராக இருப்பதாக பலர் கூறியுள்ளனர். அதிலும் ஐடி, அவுட்சோர்சிங், டெக் ஸ்டார்ட்அப்கள், கன்சல்டிங், பிஎஃப்எஸ்ஐ மற்றும் பிசினஸ் என அனைத்து துறைகளிலும் உள்ளவர்களிடம் இருந்து இந்த கருத்து ஒரே மாதிரியாக எதிரொலிக்கிறது.

மக்கள் வீட்டிலிருந்து வேலையை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்று, அவர்களின் வேலைத்திறனை பாதிக்காமல் ஒரு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை WFH முறை அனுமதித்துள்ளது. அந்த வகையில் 2,000 பணியாளர்களை உள்ளடக்கிய CIEL HR நிறுவனத்தில் 40 சதவீதம் பேர் முழுமையாக வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர் என்றும் 26 சதவீதம் பேர் ஹைப்ரிட் முறையில் இருப்பதாகவும், மீதமிருக்கும் நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பியதாவும் தலைமை நிர்வாகி ஆதித்யா மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

அதே போல டாடா ஸ்டீல் நிறுவனம் கொரோனா தொற்றுநோய்களின் போது ‘அஜில் ஒர்க்கிங் மாடல்கள்’ என்ற கொள்கையை அறிவித்தது. இதன் கீழ் ஊழியர்கள் முழுமையான WFH முறை மற்றும் குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த அதிகாரிகளை ஒரு வருடத்தில் வரம்பற்ற நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. இப்போது இந்த முறைகளை தொடர டாடா ஸ்டீல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஒரு கலப்பின வேலை முறைக்கு மாறுகிறது. அந்த வகையில் 25X25 மாதிரியின் கீழ், 25 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள்.

தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு கலப்பின மாடலில் செயல்பாட்டு வருகிறது. இது வளாகத்தில் 50 சதவீத உற்பத்தி சாரா ஊழியர்களுடன் ரோஸ்டர் முறையை பின்பற்றுகிறது என்று தலைமை நிர்வாகி மார்ட்டின் ஷ்வெங்க் கூறியுள்ளார். மேலும் KPMG நிறுவனம் அதன் அலுவலகங்களை திறந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஒரு கலப்பின வேலை மாதிரியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அடுத்ததாக டெலாய்ட் நிறுவனமும் ஏற்கனவே ஹைப்ரிட் வேலை முறைக்கு மாறிவிட்டது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!