IRCTC ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

0
IRCTC ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
IRCTC ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
IRCTC ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்து சாதாரண மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவை IRCTC என்ற ஆப் மூலமாக மேற்கொள்ளலாம். இதற்கு ஆதாரை இணைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரயில் டிக்கெட்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து சேவை மிகவும் குறைவான விலையில் வழங்கி வருவதால் இதில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் கொரோனா கால கட்டத்தில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அமல்படுத்தியது. அத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வருகிறது.

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – அனுமதி அளிக்குமா அரசு?

அதனால் அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே வாரியமும் பயணிகளுக்கு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றனர். இதில் குறிப்பாக 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட முன்பதிவில்லா சேவை கட்டணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து IRCTC ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஒரு அருமையான செய்தியை வெளியிட்டுள்ளது. இனிமேல் மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் முன்பதிவு செய்ய IRCTC ஆப் ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். இப்போது IRCTCயில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். IRCTC ஆப் உள்ள ’My account’ என்பதன் கீழ் உள்ள ‘link your aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். தங்களின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். தற்போது ஆதார் இணைக்கப்பட்ட பிறகு வெரிஃபை செய்யப்படும். அத்துடன் ‘your aadhaar has been successfully verified’ என்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!