40 வயதில் காதலித்தால் தவறா? மனம் திறந்த “பாக்கியலட்சுமி” கோபி சதீஸ் – வைரலாகும் வீடியோ!

0
40 வயதில் காதலித்தால் தவறா? மனம் திறந்த
40 வயதில் காதலித்தால் தவறா? மனம் திறந்த "பாக்கியலட்சுமி" கோபி சதீஸ் - வைரலாகும் வீடியோ!
40 வயதில் காதலித்தால் தவறா? மனம் திறந்த “பாக்கியலட்சுமி” கோபி சதீஸ் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியாக கலக்கி வரும் நடிகர் சதீஸ், சீரியலில் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு முக்கியம் என்பது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லனாக கோபி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகர் சதீஸ். தற்போது சின்னத்திரையில் கோபி கதாபாத்திரம் தான் ட்ரெண்டாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் அவருக்கு கதாபாத்திரத்தால் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் வருகிறது. அது பற்றி அவர் மனம் திறந்து பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். அதில் 40 வயதில் கோபி காதலிக்கிறார் என அனைவரும் திட்டுகிறார்கள். ஆனால் ஏன் காதலிக்க கூடாது என கேட்கிறார். சீரியலில் கோபி பாக்கியாவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

தனது மகளின் 2வது பிறந்தநாளிற்காக ஷாப்பிங் சென்ற ஆல்யா மனசா – வைரலாகும் வீடியோ!

சூழ்நிலையால் 25 வருடம் குடும்பம் நடத்தி விட்டார். அதன் பின் தன்னுடைய கல்லூரி காதலியை சந்திக்க அவருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறார். எத்தனை வயதில் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என சொல்கிறார். பின் முதலில் இந்த கதாபாத்திரம் இந்த அளவிற்கு போகும் என நினைத்து பார்க்கவில்லை. ஆனால் தற்போது இப்படி எல்லாம் நடப்பதால் எனக்கே அதிர்ச்சியாக தான் இருக்கிறது என சொல்லி இருக்கிறார். மேலும் கோபியை திட்டுவதற்கு அவர்கள் சீரியலை தினசரி வாழ்க்கையில் ஒன்றாக நினைக்கிறார்கள்.

அதனால் தான் மக்கள் அப்படி இருக்காங்க என சொல்கிறார். பின் கோபி கதாபாத்திரம் பற்றி உங்களது மனைவி என்ன சொன்னார்கள் என கேட்டதற்கு அவர் ஒரு மலையாள நடிகை. அதனால் என்னை விட அவருக்கு அனுபவம் அதிகம், என்னுடைய அப்பா அம்மா போல அவர், அவருக்கு சதீஸ் பற்றி தெரியும், ஆனால் அவர் கோபி பற்றி மட்டும் தான் பேசுவார். வெளியே செல்லும் இடத்தில் கூட எல்லாரும் பாக்கியா பாவம் சார் என்று தான் சொல்வார்கள் என சொல்லி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!