தனது மாமா மகள் மதுவை விரும்பும் தமிழ் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசொட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் தனது மாமா பெண் மதுவிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
இன்று விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் தனது மாமா பெண் மதுவிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கிண்டல் செய்கின்றனர். தங்கை காவியினி தங்களிடம் மது எதுவுமே சொல்லவில்லை என்றும் தமிழிடம் மட்டும் கேட்கிறார் என்றும் கூறுகிறார். பின், தமிழ் தங்களது கம்பெனிக்கு செல்லுகிறார். அங்கு கார்த்தி பழைய கஸ்டமர்களிடம் டெண்டர் வேண்டாம் என்று கூறுகிறார்.
நீட் தேர்வு ஆய்வுக்குழு எதிரான மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!!
அப்பா காலத்தில் இருந்து இவர்களை தெரியும் என்ற காரணத்தால் அவர்களிடம் டெண்டர் வாங்கி கொள்ளும்படி அறிவுறுத்துகிறார், தமிழ். இதனை கார்த்தியும் ஏற்றுகொள்ள்கிறார். பின், அவருக்கு போன் செய்யும் மது தான் இன்டெர்வியூவில் செலக்ட் ஆகி விட்டதாக தெரிவிக்கிறார். இதனால் தமிழ் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். அதே போல் அதனை தனது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்கிறார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
பின், மதுவின் வீட்டில் இருந்து அவரது அம்மா மற்றும் அப்பா இருவரும் வருகின்றனர். அவர்களும் மது வேலைக்கு சேர்ந்த விவகாரத்தை கூறி மகிழ்கின்றனர். அப்போது கார்த்தி தமிழ் மற்றும் மது இருவரையும் சேர்த்து வைத்து பேசுகிறார். இதனால் மதுவின் அம்மாவிற்கு கோபம் வருகிறது. அதனை யாரும் பார்க்காமல் மறைகிறார். ஆனால், அதனை கார்த்தி கவனித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.