தமிழகத்தில் இன்று (ஜூன் 6) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் இன்று (ஜூன் 6) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று (ஜூன் 6) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று (ஜூன் 6) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்று (ஜூன் 6) முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 5) மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது இன்று ( ஜூன் 6) காலை 5.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – குழு கூட்டம் ஒத்திவைப்பு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

மேலும் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி இன்று (ஜூன் 6) மற்றும் நாளை (ஜூன் 7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதே போல ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஜூன் 6 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!