தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் சுற்றுலா தலங்கள் மூடல் – புதிய கட்டுப்பாடுகள் அமல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நாளை (20-04-2021) முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி தமிழக சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் கொரோனா தொற்று வேகம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து நேற்று (19-04-2021) உத்தரவிட்டுள்ளது. அரசு அறிவிப்பின்படி நாளை (20-04-2021) முதல் மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், சந்தைகள் இயங்குவதற்கு குறிக்கப்பட்ட நேர அனுமதியுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களாகிய சுற்றுலா தலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து நாட்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள், அருங்காட்சியகங்கள் அனைத்திற்கும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை.