தமிழகத்தில் மேலும் குறைந்த தக்காளி விலை.. கிலோ இவ்வளவா? – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் மேலும் குறைந்த தக்காளி விலை.. கிலோ இவ்வளவா? - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் மேலும் குறைந்த தக்காளி விலை.. கிலோ இவ்வளவா? - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் மேலும் குறைந்த தக்காளி விலை.. கிலோ இவ்வளவா? – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளி விலையானது அதிரடியாக உயர்ந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரம் பற்றி பார்க்கலாம்.

தக்காளி விலை:

கடந்த மாதம் தமிழக மக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது தக்காளி விலை தான். இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததே விலை ஏற்றத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்து கொண்டே வருகிறது.

TNPSC தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!

அந்த வகையில் இன்று (ஆக.21) தக்காளி விலை கிலோ ரூ. 20 குறைந்துள்ளது. அதாவது பெங்களூரு தக்காளி விலை கிலோ ரூ. 20 குறைந்து ரூ.32க்கும், நாட்டு தக்காளி ரூ. 10 குறைந்து ரூ.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி விலை குறைவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தாலும், மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா என அச்சத்தில் இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!