இன்று தமிழகத்தில் கனமழை பொழியும் – வானிலை அலர்ட்!

0
இன்று தமிழகத்தில் கனமழை பொழியும் - வானிலை அலர்ட்!
இன்று தமிழகத்தில் கனமழை பொழியும் - வானிலை அலர்ட்!
இன்று தமிழகத்தில் கனமழை பொழியும் – வானிலை அலர்ட்!

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் – CEO வெளியீடு!

அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பொழியக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்த வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய வானிலை அறிக்கையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!