புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை அளிக்கும் ஆசிரியர்கள் – முதல்வருக்கு கடிதம்!

0
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை அளிக்கும் ஆசிரியர்கள் - முதல்வருக்கு கடிதம்!
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை அளிக்கும் ஆசிரியர்கள் - முதல்வருக்கு கடிதம்!
புயல் நிவாரணத்திற்கு ஊதியத்தை அளிக்கும் ஆசிரியர்கள் – முதல்வருக்கு கடிதம்!

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வகையில் தங்களின் சம்பளத்தை அளிக்க முன்வந்துள்ளது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

புயல் நிவாரணம்:

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடும் சேதம் அடைந்துள்ளது. ஏரிகளில் இருந்து நீர்கள் திறந்து விடப்பட்டதன் காரணமாகவும், தொடர்ந்து கனமழை பொழிந்து வந்ததன் காரணமாகவும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளைமுழுவதுமாக மழை நீரில் சூழ்ந்து உள்ளது. சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மீனவர்களின் படகுகளின் மூலமாக உணவு, தண்ணீர், பால் போன்றவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் டிச.08 ம் தேதி கரண்ட் இருக்காது- ஏரியா லிஸ்ட்ல வந்துருச்சு.. உடனே செக் பண்ணுங்க!

மேலும் நீரை அப்புறப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் புயல் நிவாரணத்திற்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ள முதல்வருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

புயலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வரும் நிலையில் ஆசிரியர் சங்கத்தினரின் இந்த அறிவிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!