தமிழகப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் – அரசிடம் முக்கிய கோரிக்கை!

0

தமிழகப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் – அரசிடம் முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை ஒரே நாளில் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணாவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று (டிச.11) முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை ஒவ்வொரு தேர்வு நாளின் முதல் நாள் பிற்பகலில் பதிவிறக்கம் செய்து நகல்கள் எடுத்து கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் மறுநாள் தேர்வு நடத்த சிரமம் ஏற்படும்.

Follow our Instagram for more Latest Updates

எனவே அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே நேரத்தில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட பொருளாளர் ஆ. சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!