தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு – கல்வியாளர்கள் வேதனை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், இந்த நேரத்தில் பயிற்சி புத்தகங்களை மட்டும் வழங்குவது பயனில்லாதது என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட முடியாத நிலை காரணமாக புத்தகம் மட்டும் வழங்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுவதால் அவர்களுக்கு பாடங்களில் சில தெளிவுகள் இருக்கும். ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி தான். இந்நிலையில் கல்வியாண்டே நிறைவடைந்த நிலையில் தற்போது, மாணவர்களுக்கான பாடப்பயிற்சி கட்டகம் (தேர்வுக்கான வினா வங்கி) மற்றும் பயிற்சி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது பயனற்ற ஒன்று என கல்வியாளர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
வகுப்புகள் நடைபெறாமல் புத்தகங்களை மட்டும் கொண்டு என்ன செய்வது என கல்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே உள்ள பாடங்களை படிக்க முடித்த நிலையில் தற்போது புதிய பயிற்சி புத்தகங்களை வழங்கியுள்ளதால், அதனை படிக்க முடியாத நிலை உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோடிக்கணக்கில் செலவு செய்து பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கினாலும், அதற்கான பலன் இல்லாமல் போவது தான் வேதனையானது இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.