தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

1
தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!
தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!
தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர்கள் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் இம்முறை ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கிராம கவுசல்யா திட்டத்தின் மூலம் 5692 பேருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்!!

இந்நிலையில் 9,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ளதால் அவர்களுக்கு பள்ளி இறுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 80% முதல் 90% மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வருகை புரிவார்கள் என்பதால் வாரிய தேர்வுகள் நடத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரி 8 முதல் பொறியியல் வகுப்புகள் தொடக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப்படையில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேதிகளுடன் ஒன்றாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மாதிரி வினாக்களும், வினா வங்கியும் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கடினம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!