தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 8) முதல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
நேரடி வகுப்புகள் தொடக்கம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வந்து 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களில் கொரோனா தொற்று மாணவர்களுக்கு பரவி வந்ததால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் மே மாதம் 3 ஆம் தேதி அவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 6) தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக பள்ளிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ! – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
அதன் பின்னர் தற்போது தேர்தல் பணிகள் முடிந்து பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை மீண்டும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தமிழகம் முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Useful news
Very useful
Scl open pannunga pa plzz
No school Open.. please students save..
9,10,11வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தான் கொரோனா பரவுமா எங்களயெல்லாம் பாத்தா உசுரா தெரியலையா?
Sir eaguluku leve venu plz sri Eanaku payama eruku
Good information
இல்ல 12th பசங்க மட்டும் உங்களுக்கு என்னா பண்ணங்க 10th exam எழுதணும் 11th exam எழுதணும் 12th exam எழுதணும் என்னா பண்ணுவங்க 12 th பசக்களுக்கு கொரணா வராதா? Sollunga
Sir xam konjam late ah vainga padika time aa illa…plss
Sir exam ah konjam late vainga padika time konjama iruku…. school layu portion la mudikave illa so konjam exam date ah thallai vainga🙏🙏🙏