தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் 21 அம்ச கோரிக்கைகள் – ஜூன் 14 முதல் போராட்டம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் 21 அம்ச கோரிக்கைகள் - ஜூன் 14 முதல் போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் 21 அம்ச கோரிக்கைகள் - ஜூன் 14 முதல் போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் 21 அம்ச கோரிக்கைகள் – ஜூன் 14 முதல் போராட்டம் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (ஜூன் 14) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதாவது பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் அதில் இருக்கின்றன. இது குறித்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

மீண்டும் அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!

அதில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாளை மறுநாள் (ஜூன் 14) முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள், பொருளாளர் தன்ராஜ், துணை தலைவர்கள் வேல்முருகன், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!