தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படுமா? – அரசுக்கு வந்த சிக்கல்! முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படுமா? - அரசுக்கு வந்த சிக்கல்! முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படுமா? - அரசுக்கு வந்த சிக்கல்! முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படுமா? – அரசுக்கு வந்த சிக்கல்! முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொங்கல் பரிசு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி உள்ளிட்ட பொருள்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கரும்பு வழங்க நிதி ஒதுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. அதன் பின் கரும்பு விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கருப்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணத்துடன் முழு கரும்பும் வழங்கப்பட்டது.

தமிழக மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 45 நாட்களே இருக்கிறது. தமிழக அரசு பொங்கல் பரிசு கொடுத்து என்ன முடிவு செய்துள்ளது என மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டை போல ரூ.1000 வழங்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதனால் 1,138 கோடியே 43லட்சம் செலவாகிறது. அதனால் இந்த முறை ரொக்கம் வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!