
தமிழகத்தில் ரேஷன் டூப்ளிக்கெட் ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ரேஷன் கார்டுகளை தொலைத்தவர்கள் டூப்ளிக்கெட் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுகள்:
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அரசின் பல நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களை சென்று அடைகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட மக்கள் ரேஷன் “ஸ்மார்ட் கார்டுகளை” தொலைத்தால் டூப்ளிக்கெட் கார்டு பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து ரூ. 45 கட்டணம் செலுத்தினால் வீட்டிற்கே கார்டு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் புதிய ரேஷன் கார்டு பெற பல விண்ணப்பங்கள் வருகின்றன.
எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.20,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!
அதனால் மாவட்ட ஆட்சியர் இந்த கார்டுகளை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை உரிய வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்குவார், பின் வீட்டிற்கே ரேஷன் கார்டுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் கட்டணம் ரூ. .20, விண்ணப்ப கட்டணம் ரூ.25 என ஆன்லைனில் விண்ணப்பத்துடன் கட்டினால் டூப்ளிக்கெட் கார்டு வீட்டிற்கே அனுப்பப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா தெரிவித்துள்ளார்.