தமிழகத்தில் மே 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசாணை வெளியீடு!!

1
தமிழகத்தில் மே 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசாணை வெளியீடு!! 
தமிழகத்தில் மே 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசாணை வெளியீடு!! 
தமிழகத்தில் மே 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசாணை வெளியீடு!! 
தமிழகத்தில் நோய் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் மே 6ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றன. மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து கட்டுப்பாட்டு மையங்களாக அறிவித்து வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் உள்ளது. இதை தொடர்ந்து வார இறுதி நாட்களில் மக்கள் கூடுவதை தடுக்க சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களில் அத்யாவசிய சேவைகள் மட்டும் தொடர்ந்து செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்த போதும் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை, தினசரி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி – முதன்மை செயலாளர் அறிக்கை!!

இதனால் தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை அதிகரித்து இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணம் செய்யலாம் என கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அதிகரிக்கப்ட்ட கட்டுப்பாடுகள் மே 20ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

1 COMMENT

  1. தமிழில் இப்படியான ஒரு பயனுடைய தளம் அறிந்து மகிழ்ச்சி பலறுக்கும் பகிர்ந்து உள்ளேன் வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here