தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 லிட்டர் இலவச பால் – இமமுக தேர்தல் அறிக்கை!!
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள்தோறும் 500 மி.லி முதல் 1 லிட்டர் வரை பால் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் கட்சியின் சின்னமான ‘ரோபோ’வை வெளியிட்டார். மேலும் அந்த ரோபோ தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடும் என தெரிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின் மக்களின் வளர்ச்சியை இலக்காக கொண்டு இந்த கட்சி செயல்படுகிறது என அவர் கூறினார். மேலும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு – இன்று மாலை பதவியேற்பு!!
நல்லோர் குடியிருப்பு:
தமிழகத்தில் பொது வாழ்வில் தொடண்டாற்றியவர்களுக்கு வீடு மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். மாநகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி மற்றும் இரவு நேரத்தில் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலும் மாத ஊதியம் ரூ.20,000 கீழ் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!
உதவித்தொகை:
ஒரு பெற்றோர் மட்டும் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். முதியோர்களை பராமரிக்க ரூ.500 முதல் ரூ.750 வரை உதவித்தொகை வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் 50 ஏக்கர் பரப்பிலான விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு அங்கு விளையாட்டு உபகரண விற்பனை மையங்கள் இடம்பெறும். மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் பெறுவதற்கு இணைய சந்தை அட்டை வழங்கப்படும்.
தமிழக அரசு தட்டச்சர் பணி பதவி உயர்வு – புதிய விதிகள் அமல்!!
‘பசு’மை புரட்சி:
‘பசு’மை புரட்சி திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள்தோறும் 500 மி.லி முதல் 1 லிட்டர் வரை இலவசமாக பால் வழங்கப்படும். மேலும் தகுதியின் அடிப்படையில் ஒரு விவசாயிக்கு அரை ஏக்கர் புறம்போக்கு நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு கூடுதலாக 4 கறவை மாடுகளும் வழங்கப்படும்.