தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி – தொல்லியல் துறை அறிவிப்பு!!
சிவகங்கை மாவட்டம் கீழடியை தொடர்ந்து, தமிழகத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த இருப்பதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சி:
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக 5,820 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் சுட்ட செங்கல்லால் ஆன சுவர்கள், உறைக்கிணறுகள், பானை செய்யும் தொழில் கூடங்கள், வெறும் கையால் அமுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வடிநீர் கால்வாய்கள், கூரை ஓடுகள் போன்ற பல அமைப்புகள் காணப்பட்டன.
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 2021
6ம் கட்ட அகழாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள், எடைகற்கள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மி குளவி, கொள்கலன்கள், உறை கிணறு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
இதன்படி கீழடி, அதிச்சநல்லூர் , சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடுதுறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி தொல்லியல் துறையில் ஈடுபட்டு பணி செய்வோருக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்