நாடு முழுவதும் அங்கன்வாடிகள் திறப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா காரணமாக அங்கன்வாடிகள் மூடப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் காரணமாக, கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகள் தவிர மற்ற இடங்களில் உள்ள அங்கன்வாடிகளை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அங்கன்வாடிகள் திறக்க உத்தரவு:
உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதனால் அங்கன்வாடி வாயிலாக ஊட்டச்சத்து உணவுகள் பெறும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஜகத்ராம் சனானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
அவர் குறிப்பிட்ட மனுவில் கூறியதாவது, “நாடு முழுவதும் கொரோனா காரணமாக 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கன்வாடிகளை திறந்து உரிய ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்க உத்தரவு வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்படாது – மத்திய அரசு விளக்கம்!!
இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் உள்ள அங்கன்வாடிகளை வருகிற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் திறக்க உத்தரவிட்டனர். மேலும் அங்கன்வாடி மையங்களை திறப்பது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கலந்து ஆலோசித்த பின்பு இந்த முடிவை எடுக்க வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்