தமிழகத்தில் 53 விரைவு ரயில்களுக்கு அதிரடி உத்தரவு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0

தமிழகத்தில் 53 விரைவு ரயில்களுக்கு அதிரடி உத்தரவு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் 53 விரைவு ரயில்கள் கடந்த செப்டம்பர் முதல் கூடுதல் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்கிறது. தற்போது அது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரயில்கள்

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இருந்து தினமும் பல ரயில்கள் சென்னைக்கு செல்கின்றன. அதில் வைகை, மலைக்கோட்டை உள்ளிட்ட 53 விரைவு ரயில்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கூடுதல் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெற்குரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. தற்போது இது குறித்து புதிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 53 விரைவு ரயில்கள் கடந்த செப்டம்பர் முதல் 6 மாதங்களுக்கு கூடுதல் ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புகள் அளித்தது.

Follow our Instagram for more Latest Updates

இந்த சேவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்திலும், ராக்ஃபோர்ட் விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநத்தத்திலும், மன்னை விரைவு ரயில் கொரடாச்சேரியிலும், உழவன் விரைவு ரயில் கடலூர் துறைமுகத்திலும், நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் சாத்தூரிலும் நின்று செல்லும். அதே போல மற்ற ரயில்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சோதனை அடிப்படையில் தொடர்ந்து நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!