தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!

1
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுத்தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கம் கோரிக்கை:

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. ஆனால் இன்னும் தமிழகம் கொரோனா பரவலில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. தற்போது நோய்த்தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டி உள்ளது. இதனால் மார்ச் 22ம் தேதி முதல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள் தொடரும்!!

மேலும் இன்று (மார்ச் 23) முதல் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைனில் பாடங்களை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளிகள் அளவில் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும். தற்போது தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் 12ம் வகுப்பு மாணவர்களை அச்சத்துடன் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். எனவே 12ம் வகுப்பிற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. All govt teachers became selfish they don’t want to open school because they are getting full salary by simply sitting in home but private teachers who are working lot through online classes for them govt is not paying any money like private teachers govt teachers salary should also be reduced then only they open the school

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!