தமிழகத்தில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று தொடக்கம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..??

0
??????????? ????? ?????????? ??????? ????? ???? ????? ????????.. ???? ???????????? ????????..??
தமிழகத்தில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று தொடக்கம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..??

தமிழகத்தில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று தொடக்கம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா..??

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே சாதாரண மின்சார ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் இந்த மின்சார ரயில்கள் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னை புறநகர் ரயில் சேவையில் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான மெரினா கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடங்களில் குளிர்சாதன வசதி (AC) கொண்ட ரயில் சேவை இன்று (19-04-2025)  தொடங்கப்பட்டது. இதில் தானியங்கி தகவுகள், கண்காணிப்பு கேமரா, பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடைகாலத்தில் இந்த ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!