தமிழகத்தில் செப்.13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
09.09.2021 முதல் 13.09.2021 வரை: தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு 261 சிறப்பு ரயில்கள் – ஒன்றிய ரயில்வே அறிவிப்பு!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்க கடல் பகுதிகள்
09.09.2021 முதல் 11.09.2021 வரை: தெற்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்துலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் அக்.4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
12.09.2021, 13.09.2021: மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்துலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்
09.09.2021 முதல் 13.09.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்துலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்துலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.