
உங்க வீட்டுல மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கா…?? உங்களுக்காகவே தமிழ்நாடு அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இதோ
இன்றைய உலகில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்றாலும், அதுகுறித்த புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், பொதுமக்களிடையே அதிக மின் கட்டணம், மின் மோட்டர் குறித்த பிரச்சனைகள், குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் கம்பத்தால் பாதிப்பு என பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், இதுபோன்ற புகார்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியமானது பல கட்ட ஆய்வுகளுக்கு பின் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ஒரே நாளில் பொதுமக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் வண்ணம், ஒரு நாள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்த உள்ளதாக மின்சார வாரியம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஒரு நாள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

























