தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை – ஜூலை 19 வரை அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்த விண்ணப்ப பதிவு ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு – அரசு உத்தரவு!
வழக்கமாக 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாததால் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், முதலாம் ஆண்டில் 18 ஆயிரத்து 120 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
விண்ணப்பங்கள் அனுப்ப இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மாணவர்கள் நலன் கருதி கூடுதல் மாணவர்கள் சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் http://tngptc.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.