போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் – என்னென்ன தெரியுமா?
பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்து வாகனங்களில் பேருந்து முக்கியமானதாகும். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தட்டு மக்கள் பேருந்தை மட்டுமே நம்பி பயணம் செய்து வருகின்றனர். எனவே தான் தமிழக அரசு விடியல் திட்டத்தின் கீழ் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்ற ஒன்றை வழங்கியுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுப்பப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ATM பயன்படுத்துறீங்களா? உங்களுக்கான பதிவு இதோ!
அதில், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பேருந்து பணிமனைகளில் தினசரி இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart – தயார் செய்து ஓட்டுனர் நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.முக்கியமாக அடிக்கடி பணிக்கு வராமல் முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடவும், Stalwart / Team Force ஓட்டுநர் நடத்துனர்களை Vacancy உள்ள இடங்களில் Posting போட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


























