சென்னை: இன்று சவரனுக்கு ரூ.512 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.512 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.512 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: இன்று சவரனுக்கு ரூ.512 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ஆபரணத் தங்கத்தின் விற்பனை எப்போதும் அதிகமாக தான் இருக்கும். இருப்பினும் பலர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட சற்று சரிந்து உள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை:

இந்தியாவில் விருப்பமான உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கம், மக்களின் வாழ்வில், அவர்களின் உணர்வில் கலந்த ஒரு முதலீடாக இருந்து வருகிறது. இது சிறந்த முதலீடு மட்டும் அல்ல, அவசர தேவைக்கு பயன்படுகிறது. இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவும் என்பதாலேயே மக்கள் தங்கத்தினை வாங்கி வைக்கின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் திருமணம் மற்றும் மேற்படிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். எனினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட நம் தமிழகத்தில் தான் நகைப் பிரியர்கள் அதிகம் உள்ளனர். சுபமுகூர்த்த நாள், அட்சய திருத்தி போன்ற நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நகை விற்பனையில் எந்த சரிவும் இருக்காது. ஆனால் அண்மைக் காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

Exams Daily Mobile App Download

குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகைப் பிரியர்களை அதிர வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 248 குறைந்து 39,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 70.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!