சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – முன்னிலை வகிக்கும் 15 அமைச்சர்கள்!!!

0
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் - முன்னிலை வகிக்கும் 15 அமைச்சர்கள்!!!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் - முன்னிலை வகிக்கும் 15 அமைச்சர்கள்!!!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – முன்னிலை வகிக்கும் 15 அமைச்சர்கள்!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், 15 அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளனர். 8 அமைச்சர்கள் பின்னிலையில் உள்ளனர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் ஆணையர் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்தியதன் படி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Kerala Election Result – இடதுசாரி கட்சிகள் தொடர் முன்னிலை!

முதலில் தொடங்கிய தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி, மாறி முன்னிலை பெற்று வருகிறது. இம்முறை திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த இரண்டு பெரும் புள்ளிகள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் தமிழக தேர்தல் களம் அதிக கவனம் பெற்றுள்ளது. இதுவரை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதேசமயம், அதிமுக வை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பண்ணன், ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, சரோஜா, சி.விஜயபாஸ்கர் போன்ற 15 அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

TN Election Result Live Updates – தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

மேலும், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், காமராஜ், பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி ஆகிய 8 அதிமுக அமைச்சர்கள் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!