TN Election Result Live Updates – தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

1
TN Election Result Live Updates - தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!
TN Election Result Live Updates - தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!
TN Election Result Live Updates – தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் பணிகள் முழு முடிவு தெரிய வர நள்ளிரவு ஆகலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னணி நிலவரம் Live Updates:

அதிமுக ➕ திமுக ➕ அமமுக ➕ மநீம ➕ நாதக
77 157 0 0 0

தமிழகத்தில் நடப்பு மாதமான மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • 7.00 PM – தமிழகத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆட்சியை கைபிடித்துள்ளது திமுக கூட்டணி. தற்போது தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
  • 6.50 PM – திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளரான பூண்டி கலைவாணன் வெற்றி.
  • 6.50 PM – ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான அப்பாவு வெற்றி.
  • 6.15 PM – திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரான கே.என்.நேரு வெற்றி.
  • 6.14 PM – கோவை தெற்கு தொகுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் பின்னடைவு.
  • 6.06 PM – அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான இசக்கி சுப்பையா வெற்றி.
  • 6.06 PM – எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி.
  • 5.12 PM – கீழ்பெண்ணத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரான பிச்சாண்டி வெற்றி.
  • 5.10 PM – திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்கம் தென்னரசு வெற்றி.
  • 5.08 PM – கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராஜேஷ் குமார் வெற்றி.
  • 5.06 PM – உதகமண்டலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கணேஷ் வெற்றி.
  • 5.06 PM – தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளரான நீலமேகம் வெற்றி.
  • 5.06 PM – சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் வெற்றி.
  • 4.25 PM – குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளரான ராமச்சந்திரன் வெற்றி.
  • 4.22 PM – அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான ரவி வெற்றி.
  • 4.20 PM – ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளரான தேவராஜ் வெற்றி.
  • 4.15 PM கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் வெற்றிபெற்றுள்ளார்.

  • 4.15 PMசென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரான பரந்தாமன் வெற்றி.

  • 4.15 PMதிருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளரான எ.வ.வேலு வெற்றி.

  • 3.42 PM – சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் 48,487 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

  • 3.39 PM – பவானி சங்கர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • 3.33 PM – தமிழகத்தில் 118 இடங்களில் திமுக கட்சி முன்னிலை. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்த 151 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
  • 3.30 PM – வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளரான அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • 3.30 PM – குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளரான ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
  • 2.50 PM – துறைமுகம் தொகுதியில் திமுகவின் சேகர் பாபு பாஜக வேட்பாளரான வினோஜ் செல்வதை விட 8090 வாக்குகள் முன்னிலையில் வகிக்கிறார்.
  • 2.47 PM – கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான நாகை மாலி வெற்றி.
  • 2.46 PM – திருமங்கலம் தொகுதியில் முறைகேடு நடப்பதாக புகார். வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.
  • 2.41 PM – ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு தொடர்ந்து பின்னடைவு.
  • 2.40 PM – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான மார்க்கண்டேயன் வெற்றி.
  • 2.40 PM – கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமுல் கந்தசாமி வெற்றி.
  • 2.00 PM – 9ம் சுற்று நிலவரப்படி பல்லாவரம் தொகுதியில் 1,038 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
  • 2.00 PM – திமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலை.
  • 1.12 PM – 8வது சுற்றின் முடிவில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 661 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
  • 1.12 PM – போடிநாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் முன்னிலை.
  • 1.05 PM – எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை.
  • 1.05 PM – துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.
  • 12.51 PM – திருவாரூர் தொகுதியில் திமுக முன்னிலை.
  • 12.51 PM – கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 15,115 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
  • 12.51 PM – தமிழகத்தில் திமுக கட்சி 118 தொகுதிகளில் முன்னிலை.
  • 12.01 PM – விருகம்பாக்கம் தொகுதியில் 5வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் 2,781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
  • 12.00 PM – திருப்போரூர் தொகுதியில் 5வது சுற்றின் முடிவில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் முன்னிலை.
  • 11.55 AM – பல்லாவரம் தொகுதியில் 5ம் சுற்று முடிவில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை.
  • 11.54 AM – எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி 46,267 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.
  • 11.53 AM – கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் 13,709 வாக்குகளை பெற்றுள்ளார்.
  • 11.49 AM – நாகப்பட்டினம் தொகுதியில் 3வது சுற்றில் விடுதலை சிறுத்தைகள் முன்னிலை.
  • 11.48 AM – விழுப்புரம் தொகுதியின் நாங்காவது சுற்றில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் 781 வாக்குகள் பின்னிலை.
  • 11.45 AM – கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் 29,623 வாக்குகள் பெற்று முன்னிலை.
  • 11.41 AM – கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு தினகரனை விட கூடுதலாக 19 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
  • 11.33 AM – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 14,000 வாக்குகள் முன்னிலை.
  • 11.31 AM – தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் தொடர்ந்து பின்னிலை.
  • 11.30 AM – விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்கிறார்.
  • 11.27 AM – கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்கிறார்.
  • 11.24 AM – காரைக்குடி தொகுதியில் நான்காவது சுற்று முடிவில் பாஜக பின்னடைவு,திமுக முன்னிலை.
  • 11.22 AM – மதுரவாயல் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவில் பெஞ்சமின் முன்னிலை வகிக்கிறார்.
  • 11.20 AM – சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள 26 தொகுதியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
  • 11.18 AM – மதுரை மேற்கில் செல்லூர் ராஜு பின்னடைவு.
  • 11.16 AM – திருத்தணி தொகுதியில் 8வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக 10,097 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.
  • 11.15 AM – போடிநாயக்கனூர் தொகுதியில் ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைந்து வருகிறார்.
  • 11.13 AM – எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 20,000 வாக்குகள் முன்னிலை.
  • 11.11 AM – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 11,000 வாக்குகள் முன்னிலை.
  • 11.09 AM – கொளத்தூர் தொகுதியில் 3ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஸ்டாலின் 6000 வாக்குகள் முன்னிலை.
  • 10.54 AM – விராலிமலையில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தாமதம்.
  • 10.50 AM – பெரும்பாலான தொகுதியில் திமுக, அதிமுகவிற்கு பின்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 10.44 AM – கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் விஜய்வசந்த் 12,636 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..
  • 10.42 AM – போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
  • 10.42 AM – கோவை தெற்கில் மீண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை.
  • 10.42 AM – காட்பாடி தொகுதியில் திமுக பின்னடைவு..
  • 10.42 AM – சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக முன்னிலை.
  • 10.30 AM – கோவில்பட்டியில் டி.டி.வி தினகரன் முன்னிலை தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவு.
  • 10.30 AM – கோவை தெற்கில் கமல்ஹாசன் பின்னடைவு.
  • 10.20 AM – கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை, பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு.
  • 10.17 AM – வாக்கு எண்ணிக்கை இயந்திரம் பழுதான காரணத்தினால் ஆயிரவிளக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.
  • 10.14 AM – சென்னையில் உள்ள 16 தொகுதியில் திமுக முன்னிலை.
  • 10.12 AM – திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக பின்னடைவு.
  • 10.06 AM – கொளத்தூர் தொகுதியில் 2வது சுற்று முடிவில் திமுக ஸ்டாலின் முன்னிலை.
  • 10.06 AM – எழும்பூர் தொகுதியில் திமுக முன்னிலை.
  • 10.06 AM – பல்லடம் தொகுதி 3வது சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் முன்னிலை.
  • 10.05 AM – சைதாப்பேட்டை தொகுதி 2வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை.
  • 10.03 AM – ஆலந்தூர் தொகுதி 2வது சுற்று முடிவில் திமுக 3,642 வாக்குகள் முன்னிலை.
  • 10.00 AM – காரைக்குடி தொகுதியில் எச்.ராஜா பின்னடைவு.
  • 9.56 AM – ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் பின்னடைவு (703 வாக்குகள் பின்னிலை)
  • 9.52 AM – திருவெறும்பூர் தொகுதியில் திமுக முன்னிலை.
  • 9.52 AM – ஈரோடு கிழக்கு தொகுதி முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை.
  • 9.49 AM – லால்குடி தொகுதியில் திமுக முன்னிலை.
  • 9.49 AM – கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவு.
  • 9.45 AM – ஆர்கே நகர் முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை.
  • 9.45 AM – பண்ருட்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் சிக்கல்.
  • 9.39 AM – தாம்பரம் தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை (1001 வாக்குகள் வித்தியாசம்)
  • 9.39 AM – திருவிக நகர் முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை (1517 வாக்குகள் வித்தியாசம்)
  • 9.36 AM – திருவள்ளூர் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை( 223 வாக்குகள் வித்தியாசம்)
  • 9.31 AM – பூந்தமல்லி தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை (2872 வாக்குகள் வித்தியாசம்)
  • 9.31 AM – திமுக 113 தொகுதியில் முன்னிலை.
  • 9.31 AM – அதிமுக 67 தொகுதியில் முன்னிலை.
  • 9.29 AM – திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு.
  • 9.29 AM – திருவண்ணாமலை தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை.
  • 9.23 AM – செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை(1415 வாக்குகள் வித்தியாசம்)
  • 9.23 AM – போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை.
  • 9.23 AM – திமுக 96 தொகுதியில் முன்னிலை.
  • 9.23 AMஅதிமுக 60 தொகுதியில் முன்னிலை.
  • 9.17 AMமநீம 1 தொகுதியில் முன்னிலை.
  • 9.08 AMவிருதாச்சல தொகுதியில் பிரேமலதா பின்னடைவு.
  • 9.08 AM – அதிமுக கூட்டணி 30 தொகுதியில் முன்னிலை.
  • 9.08 AM – திமுக கூட்டணி 59 தொகுதியில் முன்னிலை.
  • 9.08 AM – கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை.
  • 9.01 AM – தாராபுரம் தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை.
  • 9.01 AMகுமாரபாளையம் தொகுதி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் தங்கமணி முன்னிலை.
  • 9.01 AM – கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் பின்னடைவு.
  • 9.01 AMகோவை சிங்காநல்லூர் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கார்த்திக் முன்னிலை.
  • 8.56 AM – திமுக கூட்டணி 24 இடங்களில் முன்னிலை.
  • 8.52 AM – எடப்பாடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை.
  • 8.52 AM – கொளத்தூர் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் 667 வாக்குகள் பெற்று திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் முன்னிலை.
  • 8.49 AM – பூந்தமல்லி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை.
  • 8.42 AM – விருகம்பாக்கம் தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை (திமுக – 110, அதிமுக – 38)
  • 8.34 AM – திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையையொட்டி பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஊழியர்கள் எடுத்துவர தொடங்கினர்.
  • 8.00 AM – தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. தயவு செய்து தி.மு.க மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்றுதான் மு.க . ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளார்கள் மறக்க வேண்டாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!