பள்ளிக்கல்வித் துறையின் புதிய கற்பித்தல் வழிகாட்டுதல்: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர்கள் 70% பங்கேற்பு அவசியம்!
முக்கிய அம்சங்கள்:
- பள்ளிக்கல்வித் துறை புதிய கற்பித்தல் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
- வகுப்பறை கற்றல் செயல்பாடுகளில் மாணவர்கள் 70% நேரம் பங்கேற்க பரிந்துரை.
- ஆசிரியர்கள் வழிகாட்டியாக (Facilitator) செயல்பட அறிவுறுத்தல்.
புதிய வழிகாட்டுதல்
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய கற்பித்தல் வழிகாட்டுதல்களின்படி, வகுப்பறையில் 70% நேரம் மாணவர்கள் செயல்வழிக் கற்றல், குழு விவாதம் மற்றும் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30% நேரத்தில் ஆசிரியர்கள் வழிகாட்டும் பங்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் செயல்முறை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



























