கூச் பெஹார் டிராபி 2024-25: சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு.. குஜராத் அணியை வீழ்த்தி சாதனை..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான “2024-25 கூச் பெஹார் டிராபி” இறுதிப் போட்டி நேற்று (10-01-2025) நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வந்த நிலையில் தமிழக அணி பந்து வீச்சாளர்களின் செயல்திறனால் குஜராத் அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் கூச் பெஹார் டிராபி போட்டி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு இடையே கடுமையாக நடைபெற்ற இந்தப் கூச் பெஹார் டிராபி போட்டி டிராவில் முடிந்தாலும், தமிழ்நாடு அணி “முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் எடுத்து 53 ரன்கள்” முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. மேலும், கூச் பெஹர் டிராபியில் கடைசியாக தமிழ்நாடு 1991-92 ஆம் ஆண்டு உத்திர பிரதேச அணியுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
























