Swachh Sagar Surakshit Sagar 2026 – 5வது பதிப்பு தொடக்கம்

0

Swachh Sagar, Surakshit Sagar 2026:
5-வது பதிப்பு தொடக்கம்

Swachh Sagar, Surakshit Sagar 2026: மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கடல் மற்றும் கடற்கரை பாதுகாப்பை வலியுறுத்தும் Swachh Sagar, Surakshit Sagar 5.0 பிரச்சாரத்தின் 5-வது பதிப்பை தொடங்கி வைத்தார்.

முக்கிய அம்சங்கள்

இந்த ஒரு வார கால தேசிய பிரச்சாரம் செப்டம்பர் 12 முதல் 19, 2026 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடற்கரை தூய்மைப் பணிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதன் முக்கிய நடவடிக்கைகளில்:

  • கடற்கரை தூய்மைப் பணிகள்
  • Ocean Conservation Pledge
  • Cycling Rallies மற்றும் Marathons
  • இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள்
  • Ozone Day தொடர்பான நிகழ்ச்சிகள்
  • முதல் National Ocean Olympiad

ஆகியவை இடம்பெறுகின்றன.

கடல் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்பு

இந்தியாவின் கடற்கரைப் பகுதி 11,000 கி.மீ.-க்கும் அதிகமாக நீண்டுள்ள நிலையில், கடல் மாசுபாடு மற்றும் கடற்கரைப் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

Swachh Sagar, Surakshit Sagar 5.0, கடல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான முக்கியமான தேசிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!