Ahmedabad-ல் Hub-and-Spoke சர்வதேச விமான சேவை தொடக்கம்
Hub-and-Spoke International Flight Operations: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2026 செப்டம்பர் 1-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள Sardar Vallabhbhai Patel International Airport (SVPIA)-ல் Hub-and-Spoke சர்வதேச விமான சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த வசதியைப் பெறும் இந்தியாவின் 3-வது விமான நிலையமாக அகமதாபாத் மாறியுள்ளது.
Hub-and-Spoke முறை என்றால் என்ன?
இந்த முறையில், பயணிகள் அகமதாபாத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்தை Hub ஆகப் பயன்படுத்தி சர்வதேச destinations-க்கு பயணிக்க முடியும். முக்கியமாக Baggage Check-in, Customs மற்றும் Immigration நடைமுறைகள் அகமதாபாத்திலேயே முடிக்கப்படுவதால், டெல்லியில் மீண்டும் இந்த நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறைகிறது.
Air India Easy Connect
இந்த சேவையை Air India தனது “Easy Connect” திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது. அகமதாபாத்–டெல்லி இடையே தினசரி இரண்டு விமானங்கள் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல சர்வதேச பகுதிகளுக்கு இணைப்பு கிடைக்கும்.
இந்தியாவில் 3-வது Hub-and-Spoke Airport
இந்த Hub-and-Spoke முறை முதலில் வாரணாசி, பின்னர் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அகமதாபாத் இந்த பட்டியலில் மூன்றாவது நகரமாக இணைந்துள்ளது.
இந்த புதிய சேவை பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அகமதாபாத்தை சர்வதேச விமானப் போக்குவரத்தின் முக்கிய மையமாக வளர்க்கவும், குஜராத்தின் சுற்றுலா, ஜவுளி, மருந்து, வைரம் மற்றும் பொறியியல் துறைகளின் வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























