தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

0
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட இடைக்கால வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள்.

இடஒதுக்கீடு:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி, அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என சட்டம் இயற்றப்பட்டு, இது அரசியலமைப்புச் சட்டத்தன் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளின் நிலுவை நகைக்கடன் விபரங்கள் – பதிவாளர் சுற்றறிக்கை!!

இந்த சட்டத்தின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங்கப்படுகிறது.  இதை எதிர்த்து சில மாணவிகள் சார்பாகவும், ஒரு சில பொதுநல மனுக்களாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இடைக்கால மனுக்கள்:

மராட்டிய மாநிலத்தில் இதேபோல் மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக 69% இடஒதுக்கீடு வழக்கையும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றதில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

தீர்ப்பு:

இந்த இடைக்கால மனுக்கள் மீதான விசாரனை இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், 69% இடஒதுக்கீடு வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், மராத்தா இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கும் வரை இந்த வழக்கை விசாரிக்க தேவை இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!