
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ஜியோ அண்மையில் தனது ரீசார்ஜ் திட்டங்கள் விலையை உயர்த்தியது. இந்த நிலையில் ஜியோவின் 200 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
ஜியோ:
இந்தியாவில் கொரோனா பரவிய காலம் முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அதானல் இனைய தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்களின் மொபைலில் உள்ள இன்டர்நெட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நேரத்தில் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டாவை வழங்க முடிவு செய்து குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இது ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு பேருதவியாக இருந்து வந்தது. கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்றல் அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கியது.
TN Job “FB
Group” Join Now
அப்போது விலை குறைந்த ரீசார்ஜ் மற்றும் இண்டர்நெட் திட்டத்தால் அலுவலர்கள் எளிதாக ரீசார்ஜ் செய்து அலுவலக வேலைகளை முடித்தனர். இந்த நிலையில் அண்மையில் வோடபோன்- ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது ஜியோ 21% வரை ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியது. மற்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திய போது ஜியோவிற்கு மாறலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஜியோவும் விலையை உயர்த்தியது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
TNPSC குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!
தற்போது ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து திட்டங்களும் 200 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் தற்போது ஜியோவின் 200 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். ரூ.186 ரீசார்ஜ் திட்டம் தினமும் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ மூவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.