சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரஜினிகாந்த் அளித்த கௌரவம் – இயக்குனரே வெளியிட்ட தகவல்!
சன் டிவி சீரியல்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விரும்பி பார்க்கும் சன் டிவி சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
சன் டிவி சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் அந்த காலம் முதல் சன் டிவி சீரியல்களுக்கு தனி மவுசு இருக்கிறது. பல வெற்றி சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்துள்ளன. அந்த வகையில் தற்போது கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றை விரும்பி பார்ப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளாராம்.
பிக் பாஸ் வீட்டின் எட்டாவது வாரத்தில் நடந்த ஓபன் நாமினேஷன்.. அதிரடி காட்டிய ஹவுஸ்மெட்ஸ்!
Exams Daily Mobile App Download
அவரது வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். அதாவது நடிகர் ரஜினிகாந்த் பிரபல இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலை தான் விரும்பி பார்ப்பதாக சொல்லி இருப்பதாக இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பொதுவாக பெண்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியல் அப்படிப்பட்ட கதையை தான் மையமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.