மாநாடுகள் – ஜூலை 2019

0

மாநாடுகள் – ஜூலை 2019

இங்கு ஜூலை 2019 மாதத்தின் மாநாடுகள்  பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாநாடுகள் – ஜூலை Video – Click Here\

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூலை 2019

சர்வதேச மாநாடுகள்:

இந்தியா – ஆசியன் ட்ரோய்கா வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்

 • இந்தியா – ஆசியான் ட்ரோய்கா வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வரும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.) குறித்து முறைசாரா ஆலோசனைக்காக புதுடில்லியில் நடைபெற்றது.  கூட்டத்தில் உரையாற்றிய பியூஷ் கோயல், இந்தியா ஆர்.சி.இ.பியை தனது கிழக்குக் கொள்கையின் தர்க்கரீதியான நீட்டிப்பாகப் பார்க்கிறது, மேலும் இது முழு பிராந்தியத்திற்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்

இரண்டாவது இந்தியா-ரஷ்யா மூலோபாய பொருளாதார உரையாடல்

 • இரண்டாவது இந்தியா-ரஷ்யா மூலோபாய பொருளாதார உரையாடல் (ஐஆர்எஸ்இடி) ஜூலை 10 அன்று புதுதில்லியில் நடைபெறும். ஐ.ஆர்.எஸ்.இ.டி யின் இரண்டாவது கூட்டம் ஆறு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது, அதாவது போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி;வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சி; சிறு மற்றும் நடுத்தர வணிக ஆதரவு; டிஜிட்டல் மாற்றம் மற்றும் எல்லைப்புற தொழில்நுட்பங்கள்; வர்த்தகம்வங்கி, நிதி மற்றும் தொழில்துறையில் ஒத்துழைப்பு; சுற்றுலா மற்றும் இணைப்பு.

இந்தியாவின் என்சிபி மற்றும் மியான்மரின் சிசிடிஏசி இடையே 4 வது இயக்குநர் பொது நிலை பேச்சுக்கள்

 • இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கும் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டுப்பாட்டு மையக் குழு (சிசிடிஏசி) மியான்மர் இடையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து 4 வது இயக்குநர் பொது நிலை பேச்சு புதுடெல்லியில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க 2019 ஜூலை 9 முதல் 10 வரை இரு நாள் இருதரப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடம்பெயர்வு குறித்து உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன

 • இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடம்பெயர்வு குறித்து 5 வது உயர் மட்ட உரையாடல் புதுதில்லியில் நடைபெற்றது. இவ்வுரையாடல் மிகவும் நட்புடனும் மற்றும் ஆக்கபூர்வமான மனப்பான்மையுடன் நடைபெற்றது என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நடைபாதையில் இடம்பெயர்வு ஆகியவற்றின் பின்னணியில் பரஸ்பர ஆர்வத்தின் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியது.

கர்தார்பூர் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் வாகாவில் சந்திக்க உள்ளனர்

 • நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிக்கிய குரு குருநானக்கின் 550 வது பிறந்த நாள் விழாவையொட்டி நவம்பர் மாதத்திற்குள் செயல்பட உள்ள கர்தார்பூர் நடைபாதையின் இடைவெளி  குறைப்பு  உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் அத்தாரி-வாகா எல்லையில் சந்திக்கவுள்ளனர். மேலும்  பாகிஸ்தானின் வாகாவில் இருநாட்டு பிரதிநிதிகள் கூடி ஜீரோ பாயிண்டில் இணைப்பு, யாத்ரீகர்களின் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட வேண்டிய பயண ஆவணங்கள் குறித்தும்  விவாதிக்க உள்ளனர்.

இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சந்திப்பு

 • பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் 8 வது செயற்குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.தகவல் பகிர்வு, பரஸ்பர திறன் மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதன் மூலம் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து குழு விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக குழுவின் 13 வது கூட்டம் நடைபெற்றது.

 • நம் நாட்டின் மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை செயலர் டாக்டர் லியாம் ஃபாக்ஸ்ஸை, ஜூலை 15, 2019 அன்று இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் (ஜெட்கோ) 13 வது கூட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பு லண்டனில் நடைபெற்றது.

விண்வெளி ஒத்துழைப்பு குறித்து இந்தியா, ரஷ்யா சந்திப்பு

 • இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானப் பயணமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு உதவி உட்பட விண்வெளித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் புதுதில்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
 • புதிய விண்வெளி அமைப்புகள், ராக்கெட் என்ஜின்கள், உந்துசக்திகள் மற்றும் உந்துவிசை அமைப்புகள், விண்கலங்கள் மற்றும் ஏவுகணை வாகன தொழில்நுட்பம் உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

துபாய் உலக கண்காட்சி 2020

 • துபாய் உலக கண்காட்சி 2020 அக்டோபர் 20 முதல் 2021 ஏப்ரல் 10 வரை ஆறு மாதங்களுக்கு நடைபெறும். இந்தக் கண்காட்சியின் கருப்பொருள் “மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்பது ஆகும்.

இந்தியா, சவுதி அரேபியா இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தன

 • இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் சவூதி அரேபியாவின் எரிசக்தி, கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹுடன் கலந்துரையாடினார்.

இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே  தளவாட உச்சி மாநாடு

·நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி காத்மாண்டுவில் இந்தியா-நேபாள தளவாட உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். வர்த்தக மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாகவும், தொந்தரவில்லாமலும், செலவு குறைந்ததாகவும் மாற்றுவதில் ஸ்மார்ட் தளவாடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.

தேசிய மாநாடுகள்:

பனிப்பாறை ஆபத்துகள் மற்றும் அபாயங்கள் குறித்து என்.டி.எம்.ஏ ஒர்க்கஷாப் ஒன்றை நடத்துகிறது

 • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகமை (எஸ்.டி.சி) உடன் இணைந்து பனிப்பாறை அபாயங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நிர்வகிப்பது குறிப்பாக பனிப்பாறை ஏரி வெடிக்கும் வெள்ளம் (GLOF கள்)
 • குறித்த இரண்டு நாள் கூட்டத்தை புதுடெல்லியில் ஏற்பாடு செய்தது. GLOF கள் ஒரு நீர்த்தேக்கத்தின் திடீரென வெளியேற்றப்படுவதைக் குறிக்கின்றன, அவை அடியில், பக்கத்தில், முன், உள்ளே, அல்லது பனிப்பாறையின் மேற்பரப்பில் உருவாகும் ஆபத்து ஆகும்.

மத்திய பயிற்சி கவுன்சிலின் (சிஏசி) 36 வது கூட்டம்

 • நம் நாட்டில் திறன் பயிற்சியை அதிகரிக்கும் முயற்சியில், பயிற்சி விதிகள் சட்டம் 1992 இல்  திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (எம்.எஸ்.டி.இ) மத்திய பயிற்சி கவுன்சிலின் (சிஏசி) 36 வது கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது .36 வது மத்திய பயிற்சி கவுன்சில் கூட்டம், வேலைவாய்ப்புப் பயிற்சியைப் பெறவும் மற்றும் வேலைவாய்ப்புக்குச் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும் பாடுபடும் இந்திய இளைஞர்களின் ஆர்வத்தையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல் படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

“கௌசல் யுவா சம்வாத்

 • ஜூலை 15, 2019 அன்று உலக இளைஞர் திறன் தினத்தை நினைவுகூறவும் மற்றும் திறன் இந்தியா திட்டத்தின் 4வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் “கௌசல் யுவா சம்வாத்” (ஒரு இளைஞர் உரையாடல்) தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 • ஜூலை 8 மற்றும் 10 ஆம் தேதிகளுக்கு இடையில் கௌசல் யுவா சம்வாத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து திறன் பயிற்சி மையங்களிலும் உள்ள இளைஞர்களிடம் அவர்களின் கருத்துக்கள், யோசனைகள், வாய்ப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்க ஒரு திறந்த உரையாடலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது தற்போதுள்ள திட்டங்களை அளவிடுவதற்கும், அதன் திட்டங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அமைச்சகத்திற்கு உதவும் என்று தெரிவித்தது

சர்க்கரை மாநாடு 2020

 • மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்த சர்க்கரை மாநாடு 2020 புனேயில் தொடங்குகிறது. இந்திய சர்க்கரைத் தொழிலில் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் இடையில் ஒரு திறந்த உரையாடலை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில்துறையின் முக்கியஸ்தர்கள் இடையே முக்கிய அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெறும்

புதுடில்லியில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை

 • இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்க புதுதில்லியில் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்தது . ஜி 20 உச்சிமாநாட்டை ஒட்டி ஜப்பானில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த பின்னர் வர்த்தக பிரச்சினைகள் குறித்த முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது
“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” குறித்த FICCI சர்வதேச கருத்தரங்கு
 • கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், புது தில்லியில் நடந்த ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ என்ற FICCI சர்வதேச கருத்தரங்கின் போது தொழில்துறையின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய கடற்படையின் சீனியர் எக்கலன்ஸ் ஆகியோருடன் உரையாற்றினார்.

புதுதில்லியில்  இந்தியா யு.எஸ்.டி.ஆர் பேச்சுவார்த்தை.

 • இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுடன் மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாட்டிற்கான சாத்தியங்களை ஆராய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (யு.எஸ்.டி.ஆர்) இந்திய பிரதிநிதியடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு பேச்சு 12 ஜூலை 2019 அன்று இந்திய தூதுக்குழுவுடன் நடைபெற்றது. இரு தரப்பினரும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதித்தனர் மற்றும் பொருளாதார உறவை மேலும் வளர்ப்பது மற்றும் பரஸ்பர வர்த்தக பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட நன்மை தரக்கூடிய விளைவுகளை அடைவதற்கான விவாதங்களைத் தொடர ஒப்புக்கொண்டனர்.

ஓடிஎஃப் பிளஸ் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டமிடல் பட்டறை டெல்லியில் நடைபெற்றது.

 • ஸ்வச் பாரத் மிஷனின் (கிராமீன்) கீழ் 5.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், 622 மாவட்டங்கள், மற்றும் 30 மாநிலங்கள் / யூ.டி.க்கள் கிராமப்புற இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்ற நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (டி.டி.டபிள்யூ.எஸ்), ஜால் சக்தி அமைச்சகம்   புது தில்லியில் ஜூலை 12-13,2019 முதல் இரண்டு நாள் ஓடிஎஃப் பிளஸ் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டமிடலில் பட்டறையை ஏற்பாடு செய்தது.

புள்ளிவிவரங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த தேசிய கருத்தரங்கு மாநாடு

 • ‘’புள்ளிவிவரம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள்” குறித்த இரண்டு நாள் ’தேசிய கருத்தரங்கு மாநாட்டை இந்தியாவின் முதன்மை புள்ளிவிவர நிபுணரும், இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளருமான பிரவீன் ஸ்ரீவாஸ்தவா லக்னோ பல்கலைக்கழகத்தின் மால்வியா ஆடிட்டோரியத்தில் திறந்து வைத்தார்.

சுரங்க அமைச்சகம் சிவப்பு சேற்றை திறம்பட பயன்படுத்துவது குறித்த ஒர்க்ஷாப் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது

 • பொதுவாக ‘சிவப்பு சேறு’ என்று அழைக்கப்படும் பாக்சைட் எச்சத்தின் உற்பத்தி பயன்பாட்டை நோக்கிய ஒரு படியாக, ‘வேஸ்ட் டூ வெல்த்’ என்று அழைக்கப்படும் ஒரு ஒர்க்ஷாப் புதுதில்லியில் சுரங்க அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முசோரியில் இமயமலை மாநாடு நடைபெறுகிறது

 • உத்தரகண்ட் மாநிலத்தின், முசோரியில் இமயமலை மாநாடு நடைபெறுகிறது. இமயமலை மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு

 • மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா லக்னோவில் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை திறந்து வைத்தார். 65,000 கோடி மதிப்புள்ள 250 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆளுமை 2019 தொடர்பான 22 வது தேசிய மாநாடு ஷில்லாங்கில் நடைபெற உள்ளது

 • நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளைத் தீர்க்கும் துறை (DARPG), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் மேகாலயா மாநில அரசு இணைந்து இ-ஆளுமை 2019 தொடர்பான 22வது தேசிய மாநாட்டை 2019 ஆகஸ்ட் 8-9 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. வடகிழக்கு இந்தியப்பகுதியில் இந்த நிகழ்வு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் “டிஜிட்டல் இந்தியா: சிறப்பிற்கு வெற்றி”[Digital India: Success to Excellence] என்பதாகும்.

Download PDF

Current Affairs 2019  Video in Tamil

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!