புதிய பாம்பன் பாலத்தின் சோதனை ஓட்டத்தில் வெற்றி.. ரயில்களை இயக்க பரிந்துரை…
ஐஐடி மெட்ராஸின் கண்காணிப்புக் கருவி மூலம் கண்டறியப்பட்ட அதிகப்படியான அதிர்வின் காரணமாக 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பழைய பாம்பன் ரயில்வே கடல் வழி பாலத்தில் ரயில் சேவைகள் டிசம்பர் 2022 இல் நிறுத்தப்பட்டன. மேலும் பழைய பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. இது 2.07 கிலோமீட்டர் (1.29 மைல்) நீளம் கொண்ட இந்தியாவின் முதல் செங்குத்தான லிப்ட் கடல் பாலமாகும்.
அதிநவீன வடிவமைப்பு கொண்டு சர்வதேச ஆலோசனை நிறுவனமான TYPSA ஆல் உருவாக்கப்பட்ட இந்த பலத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடியாக சோதனை செய்தார். இதை தொடர்ந்து புதிய பாம்பன் பாலத்தில் ரயில்களை 50 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க பரிந்துரைத்திருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


























